Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனுஷ்கா படத்தால் தள்ளிப்போன சூர்யா படம்?

  பாண்டிராஜ் இயக்கத்தில் சிறுவர்கள் நடித்திருக்கும் பசங்க2 படம் நவம்பர் 27 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. இப்போது அந்தப்படம் ஒரு வாரம் தள்ளி டிசம்பர் 4 ஆம் தேதிக்குப் போய்விட்டது. நவம்பர் பத்தாம்தேதி வெளியான தீபாவளிப்படங்களைத் தொடர்ந்து பெரியபடங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் பசங்க2 படம் என்பது மட்டுமின்றி சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கும் படம் வெளியாவது நல்லதுதானே.

வேறு பெரிய போட்டிப்படங்கள் எதுவும் இல்லாத நிலையில் இந்தப்படத்தை ஒரு வாரம் தள்ளிவைத்தது எதனால்? என்று விசாரித்தால், அதே நவம்பர் 27 ஆம் தேதி அனுஷ்கா நடித்திருக்கும் இஞ்சிஇடுப்பழகி படம் வெளியாகவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்பின்னர்தான் இவர்கள் அறிவிப்பு வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களின் வெளிநாட்டு விநியோகஉரிமையையும் சஞ்சய்வாத்வா என்கிற ஒருவர் வாங்கியிருக்கிறாராம்.

அவர், ஏற்கெனவே இஞ்சிஇடுப்பழகி இந்தத் தேதிதியில் வருமென்று சொல்லிவிட்டார்கள், அதன்பின்னர்தான் நீங்கள் சொன்னீர்கள், ஒரே நாளில் இலண்டுபடங்களை வெளியிடுவது எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே நீங்கள் ஒரு வாரம் தள்ளிவெளியிடுங்கள் அல்லது பேசியவிலையை விட குறிப்பிட்ட தொகையைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. விலைகுறைத்து படத்தைக் கொடுக்கமுடியாது என்பதற்காக படத்தை ஒரு வாரம் தள்ளிவைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.   

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close