Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கனவு நிறைவேறும் நேரத்தில் கதாநாயகனுக்கு நடந்த சோகம்

விஜய் என்பவர் இயக்கிவரும் படத்தின் பெயர் “க க க போ”. இப்படத்தில் நாயகனாக கேசவன் மற்றும் ரோபோ சங்கர், சாக்‌ஷி அகர்வால், பவர்ஸ்டார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, நாயகன் கேசவன் மற்றும் பெற்றோர் மலேசியாவிற்குச் சென்றிருக்கிறார்கள். அந்த நேரத்தில் மலேசியாவில் உள்ள நீர்வீழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னேயே எதிர்பாராத விதமாக நீரில் இழுத்துச் செல்லப்பட்டார் கேசவன்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் அன்று மாலை 6 மணிக்கு மலேசியா போலீஸில் தகவல் கொடுத்தனர். அடுத்த நாள் காலை எட்டு மணியளவில் கேசவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

படம் முடிந்து வெளியீட்டிற்குத் தயாரான நேரத்தில் நாயகன் மரணமான செய்தி கேட்டு இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா அடுத்த வாரம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு திரையுலகில் அடியெடுத்து வைத்தாராம் கேசவன். முதல் படம் நடித்து வெளியாவதற்குள்ளேயே இந்த சோக நிகழ்வு நடந்ததால் அவரின் பெற்றோர் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close