Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சித்தார்த்தின் புத்திசாலித்தனம் பயன் தருமா?

எனக்குள்ஒருவன் படத்தைத் தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஜில்ஜங்ஜக். அவரே தயாரிக்கும் இந்தப்படத்தை தீரஜ்வைத்தி எனும் புதியவர் இயக்குகிறார்.

இந்தப்படத்தின் முதல்பார்வை, அதைத் தொடர்ந்து, படத்தின் குறுமுன்னோட்டம் எனப்படும் டீஸர் மற்றும் இரண்டு பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். நவம்பர் ஆறாம்தேதி அந்த டீஸரை சிவகார்த்திகேயனும் ஹன்சிகாவும் வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து  வந்த டீஸரை இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ் வெளியிட்டார். ஷுட் த குருவி பாடலை சல்மான்கான் வெளியிட்டார்.

அடுத்து இசையமைப்பாளர்கள் ஷான்ரால்டனும் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடியிருக்கும் ரெட்ரோடு என்கிற பாடலை நவம்பர் 24 அன்று விஷால் வெளியிடவிருக்கிறார்.

அவரே தயாரித்து, நடித்துவருவதால் தன்னுடைய படத்தின் விளம்பரத்தை மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார் சித்தார்த். இது அவருக்கு வியாபார ரீதியாகப் பலன் தந்தால் நல்லதுதான்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close