Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோபக்கார கிழவனாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நையப்புடைக்கும் படம்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக நடிக்கும் படம் நையப்புடை. படத்தில் இன்னொரு ஹீரோவாக கவிஞர் பா.விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், விஜி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் 70 வயது நிரம்பிய அதே நேரத்தில் தவறுகளைக் கண்டு வெகுண்டெழும் கோபக்கார கிழவன் கதாபாத்திரத்திலும், கவிஞர் பா.விஜய் வேகமான துடிப்புள்ள இளம் ரிப்போர்ட்டராகவும், நான் கடவுள் ராஜேந்திரன் நகைச்சுவை கலந்த வில்லனாகவும், எம்.எஸ்.பாஸ்கர் ஒரு கிரிமினலான போலீஸ் அதிகாரியாகவும், ஆரோகணம் விஜி புரட்சிகரமான ஏழைத் தாயாகவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் விஜய்விக்ரம் இயக்குகிறார். இவர் பூனா பிலிம் இன்ஸ்டியூட்டிலும், மும்பையிலும் இயக்குநர் படிப்பு படித்தவர். ஜீவன் ஒளிப்பதிவு இயக்குனராகவும், தாஜ்நூர் இசையமைக்க, கலை இயக்குனராக வீரமணியும், ஸ்டன்ட் மாஸ்டராக பில்லா ஜெகனும் பணிபுரிகிறார்கள். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படம் பற்றி தாணு கூறுகையில், ஒரு ஆக்ஷன் படத்தை வித்தியாசமாகவும் முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கும் படம்தான் இது.

இயக்குனர்கள் பவித்ரன்,ஷங்கர், ராஜேஷ் பொன்ராம் இவர்களை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் பட்டறையில் இருந்து புறப்பட்டு வரும் அடுத்த இயக்குனர் விஜய்விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் மகன் விஜய், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகிய இருவரையும் ஹீரோவாக வைத்து படமெடுக்கும் பெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது என்றும் இந்தப் படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பெரிய நடிகராகவும் வலம் வருவார் என்பது நிச்சயம் என்றும் கூறினார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close