Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொங்கல் வெளியீட்டுப் படங்களில் நிகழும் ஆச்சரியம்

அடுத்த ஆண்டு ஜனவரியில் வருகிற பொங்கல்நாளில் ஆறேழு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சூர்யாவின் 24, விஷாலின் கதகளி, ஜெயம்ரவியின் மிருதன், ஜீவாவின் போக்கிரராஜா, பாலா இயக்கும் தாரைதப்பட்டை மற்றும் சுந்தர்.சி இயக்கியிருக்கும் அரண்மனை 2 ஆகிய படங்கள் வெளியாகும் என்று இப்போது சொல்லப்பட்டிருக்கிறது.

இவற்றில் சூர்யாவின் 24 படத்துக்கு நிறைய வேலைகள் இருப்பதால் அது பொங்கல்நாளில் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று சொல்கிறார்கள். மற்ற படங்கள் எல்லாம் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இவற்றை வெளியிடும் தயாரிப்புநிறுவனங்கள் விசயத்தில் ஆச்சரியம் இருக்கிறது.

ஒரு நிறுவனம் ஒருபடத்தை வெளியிடுவது இயல்பானது. பொங்கல்படங்களில் ஒரேநிறுவனம் இரண்டுபடங்களை வெளியிடுகிறது. இன்னொரு நிறுவனம் இரண்டுபடங்களை வெளியிடவிருக்கிறது. இவ்விரு நிறுவனங்களின் நான்குபடங்கள் வெளியாவது உறுதி என்று சொல்லப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த கதகளி மற்றும் சுந்தர்.சி இயக்கியிருக்கும் அரண்மனை 2 ஆகிய படங்களை தேனான்டாள்நிறுவனம் வெளியிடவிருக்கிறது. பாலாவின் தாரைதப்பட்டை மற்றும் ஜெயம்ரவியின் மிருதன் ஆகிய படங்களை ஐங்கரன்நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

இந்நிறுவனங்கள் ஒரேநாளில் இரண்டுபடங்களை வெளியிட முடிவுசெய்திருப்பது எதனால்? பொங்கல் சமயத்தில் தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு விடுமுறைகள் இருக்கும் அதனால் அப்போது வெளியாகும் படங்களுக்கு தொடக்கவசூல் சிறப்பாக இருக்கும் என்பதால் பொங்கலைக்குறிவைத்து இவ்வளவு படங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றனவாம்.

இது இப்போதைய நிலை இவற்றில் பல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close