Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கவுண்டமணி படத்தை சிரஞ்சீவி வாங்கினாரா?

புதுஇயக்குநர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் கவுண்டமணி நடித்த 49ஓ படத்தை தெலுங்கில் எடுக்கவிருப்பதாகவும், அதற்காக அந்தப்படத்தின் உரிமையைப் பெருந்தொகை கொடுத்து சிரஞ்சீவி வாங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சிரஞ்சீவி அரசியலிலும் இருப்பதால் விவசாயிகள் சிக்கலைப் பற்றியும் விளைநிலங்களைப் பாதுகாப்பது பற்றிய கதையைக் கொண்ட இந்தப்படத்தில் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் இப்படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

ஏற்கெனவே இதுபோன்ற சிக்கலை மையப்படுத்திய கத்தி படத்தைத் தெலுங்கில் எடுப்பதாகவும் அதில் சிரஞ்சீவி நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. அதுவே உறுதியாகாத நிலையில் இப்போது 49ஓ படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறார் என்று செய்தி வருகிறது. இதுபற்றி விசாரித்தால், அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

49ஓ படத்தைத் தெலுங்கில் எடுக்க வேறொரு நிறுவனம் அணுகியிருப்பதாவும் அது சம்பந்தப்பட்ட பேச்சுகள் நடந்துகொண்டிருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் சிரஞ்சீவி மற்றும் அவர் சார்பாக இதுவரை யாரும் பேசவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close