Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.வி.பிரகாஷைத் தொடரும் பெயர் சென்டிமெண்ட்!

புதுமுக இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் படம் “புரூஸ்லி”. இப்படத்தைத் தொடர்ந்து ராஜேஷ்  இயக்கத்தில் அடுத்து ஹீரோவாக நடிக்கவிருப்பதும் உறுதியாகியிருக்கிறது.

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்திற்குப் பிறகு ராஜேஷ் அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்துவிட்டாராம். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு “ கடவுள் இருக்கான் குமாரு” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான கலைஞர்கள் தேர்வு மற்றும் பிற வேலைகள் தொடங்கி நடந்துவருகிறது. புரூஸ்லி படப்பிடிப்பு முடிந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்பில் ஜி.வி.கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமான படம் டார்லிங். அடுத்து வெளியான படம் “ த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”, அடுத்து வெளியாகவிருப்பது புரூஸ்லி. இவ்வாறு படங்களின் பெயர்கள் முறையே,  ஒரு வார்த்தை தலைப்பு அடுத்த படம் மூன்று வார்த்தையில் தலைப்பு என்று மாறி மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இயல்பாக அமைகிறதா? அல்லது  சென்டிமெண்டாக இப்படி வைக்கிறார்களா? என்று தற்பொழுது கிசுகிசுக்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close