Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயக்குநர் சொல்லும் சித்தார்த்தின் நீல நிற முடி மர்மம்

சித்தார்த்தின் ஜில்.ஜங்.ஜக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வித்யாசமான கையில் துப்பாக்கி, நீல நிற முடி என சித்தார்த்தின் தோற்றம் பலருக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் இதுகுறித்து இயக்குநர் தீரஜ் வைத்தி கூறியுள்ளார்.

படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி. எல்லா பாத்திரங்களும் கற்பனையான படைப்பே.மேலும் சித்தார்த்தின் பாத்திரமும் கற்பனையான பாத்திரமே. அதனாலேயே அசாதாரணமாக சித்தார்த்துக்கு நீல நிற முடி. இது முழுக்க முழுக்க பசங்க படம். அதாவது ஆண்கள் மட்டுமே நடித்திருக்கும் வித்யாசமான படம்.

பெண் கதாபாத்திரங்களே படத்தில் இல்லை. இதுவரை ஹீரோயின் இல்லாத படம் கூட பார்த்திருப்பீர்கள். ஆனால் முழுக்க முழுக்க பெண் பாத்திரங்களே இல்லாத படம் எனவும் ஆச்சர்யப்படுத்துகிறார் அறிமுக இயக்குநர் தீரஜ் வைத்தி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close