Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்லாப் படங்களுக்கும் யூ சான்றிதழ், வரிவிலக்கும் கிடைக்குமா?

இந்த வாரமும் அதற்கடுத்த வாரமும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள் சென்சார் பார்வைக்கு வந்தவண்ணமாக இருக்கின்றன. பசங்க, இஞ்சிஇடுப்பழகி, புகழ் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் சென்சாருக்கு சென்று க்ளீன் யூ சான்றிதழைப் பெற்றிருக்கிறது.

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிவரும் படம் இஞ்சி இடுப்பழகி. தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் வெளியாகிறது. கீரவாணி இசையமைக்கும் இப்படத்தில் அனுஷ்கா குண்டுப் பெண்ணாக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து சென்சாருக்கு சென்ற படம் பசங்க. சூர்யா, அமலாபால் சிறப்புத் தோற்றத்தில் நடித்து பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படமே பசங்க 2. ஹைக்கூ என்று முதலில் பெயரிடப்பட்டு தற்பொழுது பசங்க படத்தின் இரண்டாம் பாகம் என்று மாற்றப்பட்டது.  பசங்க, மெரினாவைத் தொடர்ந்து பாண்டிராஜ் குழந்தைகளை மையப்படுத்தி எடுத்திருக்கும்  படம். எந்த வித காட்சி நீக்கமுமின்றி  யூ சான்றிதழ் பெற்று டிசம்பர் 4ம் தேதி வெளியாகிறது. 

ஜெய் நடிப்பில் மணிமாறன் இயக்கிவரும் புகழ் படமும் சென்சார் முடிந்துவிட்டது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி வரும் வாரங்களில் வெளியாகவிருக்கும் மிர்ச்சி சிவா நடிக்கும் 144, ராதாமோகன் இயக்கியிருக்கும் உப்புகருவாடு உள்ளிட்ட படங்களும் யூ சன்றிதழ் ஏற்கெனவே பெற்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாப்படங்களுக்கும் வரிவிலக்குக் கிடைக்குமா? என்பது அடுத்த கேள்வி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close