Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீடியாவை சாடும் சித்தார்த்தின் துணிச்சல்!

சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெகுவாக மழைபெய்துவருகிறது. இம்மழையால் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதுகுறித்து சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தேசிய உடகங்களே, மழை வெள்ளத்தால் சென்னையும் தமிழகப் பகுதிகளும் பாதிப்படைந்துள்ளது. சென்னையும் இந்தியாவின் ஒரு பகுதிதான். அமீர்கான், ஷீனா விவகாரத்தை விட இது முக்கியானது. எங்களையும் கவனியுங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள்” என்று கூறியுள்ளார்.

சென்னை தவிர மற்ற தேசிய ஊடகங்களில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை குறித்த எந்த செய்தியும் அதிகமாக இடம்பெறவில்லை. அமீர்கான் மற்றும் ஷீனா பற்றியான விவகாரமே தேசிய ஊடகங்களில் பேசுபொருளாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களின் மனதில் இருக்கும் ஒரு விஷயத்தை வெளிப்படையாக தேசிய ஊடகங்களை எதிர்த்து, ட்விட்டரில் துணிச்சலுடன் கருத்தைப் பதிவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close