Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்துக்குப் பதிலடி கொடுப்பாரா விஜய்?

புலி படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவருகிறார். விஜய்யின் 59வது படம் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

இப்படத்திற்கான முதல் பார்வை இன்றிரவு வெளியாகவிருக்கிறது.  இந்நிலையில் இப்படத்திற்கான டைட்டில் பற்றி பல தகவல்கள் உலவி சர்ச்சைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. 

படப்பிடிப்பு நடந்துவரும்போதே பல பெயர்கள் அடிபட்டன. ஆரம்பத்தில் மூன்றுமுகம், வெற்றி, தாறுமாறு மற்றும் காக்கி என்ற பெயர்கள் சொல்லப்பட்டுவந்தன. தற்பொழுது விஜய் அட்லி படத்தின் பெயர் தெறி என்று இணையத்தில் பரவிவருகிறது.

புலி படத்தில் விஜய் வேதாளமாக நடித்திருப்பார். தொடர்ந்து வெளியான அஜித் படத்திற்கு வேதாளம் என்று பெயரிட்டனர். அதனால் விஜய்யின் அடுத்த படத்திற்கு, அஜித்தின் வேதாளம் படத்தின் டயலாக்கான தெறிக்கவிடலாமா? என்ற வார்த்தையிலிருந்து தெறியை மட்டும் எடுத்து அதைப் பெயராக வைக்கப்படலாம் என்று இணையத்தில் தகவல்கள் கிளம்பிவருகின்றன.

விஜய் வேதாளமாக நடிக்கும் விஷயம் தெரிந்தே அஜித் படத்துக்கு அந்தப்பெயரை வைத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. அதற்குப் பதிலடியாக விஜய் படத்துக்கு அஜித் பட வசனத்தை வைக்கப்போகிறார்கள் என்ற பேச்சு வருகிறது.

காக்கியா? தெறியா? விஜய்-அட்லி படத்தின் டைட்டில் என்னவென்பது இன்றிரவு தெறிந்துவிடும். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close