Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய்-அட்லி பட டைட்டில் தெறி!

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய்-அட்லி படத்திற்கான டைட்டில் வெளியாகியிருகிறது. இப்படத்திற்கு தெறி என்று பெயரிட்டுள்ளனர்.

சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான புலி படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு வெளியாகவிருக்கும் 59வது படம். ராஜாராணி படத்தையடுத்து அட்லீ இயக்கிவரும் இரண்டாவது படம் இது.

விஜய் போலீஸாக இப்படத்தில் நடிக்கிறார். இயக்குநர் மகேந்திரன், சமந்தா, எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துவருகின்றனர். படத்தை எஸ்.தாணு தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு முன்னதாக ‘காக்கி’, ‘வெற்றி’ ‘தாறுமாறு’, ‘தெறி’ உள்ளிட்ட பட டைட்டில்கள் ஆலோசிக்கப்பட்டு இறுதியில் தெறி என்ற பெயரை படக்குழுவினர் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் இன்னும் சில நேரங்களில் ட்விட்டரில் வெளியாகவிருக்கிறது.

தெறி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்:

MUST READ

எடிட்டர் சாய்ஸ்