Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என் தலைப்பை அபகரித்து விட்டனர்- தெறி பற்றி குமுறும் உதவி இயக்குநர்

விஜய் நடிக்கும் தெறி படத்தின் தலைப்புக்கு முகநூல் வழியாக சிக்கல் ஆரம்பித்துள்ளது.

சதிஷ் குமார் என்னும் உதவி இயக்குநர் தனது முகநூலில் தலைப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் யோசிச்சு மூன்று மாதத்திற்கு முன்பே பெயர் வைப்பேனாம், ரெஜிஸ்டரும் பண்ணுவேனாம். ஆனா ரெஜிஸ்டர் புக் அவங்க கிட்ட இருக்குறதால, என் படத்தலைப்பையே அவர் படத்துக்கு வச்சுப்பாராம்.

அதுவும் என் அனுமதி இல்லாம. அவங்க ஏற்கனவே புக் பண்ண மாதிரி ரிஜிஸ்டர் புக்ல பேர் மாத்திப்பாங்களாம். இதுக்காக நான் சண்டைபோடப்போறதில்லை, என்கிட்ட கேட்டா நானே கொடுத்திருப்பேன் என தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படியாக அந்த உதவி இயக்குநர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் தெறி தலைப்புக்கு பிரச்னை இல்லையென்றாலும் சின்ன சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்