Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’முத்தத்துக்கு நோ”...சிம்புவின் நாயகி மஞ்சிமா அதிரடி!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் அச்சம் என்பது மடமையடா, தெலுங்கில் நாகசைதன்யா நடிக்க ஒரே நேரத்தில் தெலுங்கிலும் சாஹஸம் ஸ்வாசகா சாகிபோ என்னும் பெயரில் உருவாகிவருகிறது. இரண்டிலுமே நாயகி மஞ்சிமா மோகன்.

கேரள வரவான மஞ்சிமா முத்தக் காட்சிகளுக்கு நோ சொல்கிறார். சென்னை ஸ்டெல்லா மேரீஸில் படித்த மஞ்சிமாவிற்கு கௌதம் மேனனை மிகவும் பிடிக்குமாம். கௌதம் மேனன் படங்களில் பெண்களை மிக அழகாகக் காட்டுவார் எனப் பூரிக்கும் மஞ்சிமாவுக்கு சைஸ் ஸீரோவாக இருப்பதில் நம்பிக்கை இல்லையாம். ஆரோக்கியமாக இருப்பதும், திரையில் பார்ப்பதற்கு அழகாக இருப்பதுமே முக்கியம் என நினைக்கிறேன்.

எல்லா பாத்திரங்களிலும் நடிக்க ரெடி. ஆனால் கௌதம்மேனன் சாரின் சில படங்களில் நான் முத்தக்காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். எனக்கு முத்தக்காட்சிகளில் நடிப்பதில் விருப்பமில்லை. மேலும் உடைகளும் அப்படித்தான். எனக்குப் பொருத்தம் இல்லாத உடைகள் அது சுடிதாராக இருந்தாலும் நான் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறியுள்ளார் மஞ்சிமா மோகன்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close