Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசம்பர் 4 இல் ரஜினிமுருகன் ரிலீஸ்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் ரஜினிமுருகன் தயாராகிப் பல மாதங்கள் ஆகின்றன. அந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்தின் பொருளதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம் வெளியாவது தள்ளிப்போய்க்கொண்டிருந்தது.

கடைசியாக டிசம்பர் மாதத்தில் அப்படம் கண்டிப்பாக வெளியாகிவிடும் என்று சொன்னார்கள். டிசம்பர் 11 அல்லது 18 ஆம் தேதி படம் வெளியாகலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதிரடியாக அந்தப்படம் டிசம்பர் நான்காம்தேதியே வெளியாகவிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்தப்படம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தொடர்பாகக் கடந்த பல நாட்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தனவாம்.

நேற்றுஇரவு தொடங்கி விடியவிடிய நடந்த பேச்சுவார்த்தைகளில் எல்லாப் பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்பட்டுவிட்டதென்று சொல்லப்படுகிறது. இதனால் டிசம்பர் நான்காம்தேதியே படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close