Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பசங்க 2 தள்ளிப்போனது எதனால்?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிறுவர்களுடன் சூர்யா, அமலாபால், பிந்துமாதவி உட்பட பலர் நடித்திருக்கும் பசங்க2 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. முதலில் நவம்பர் 27 ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதன்பின்னர் டிசம்பர் 4 ஆம் தேதி என்று சொல்லியிருந்தார்கள்.

இப்போது டிசம்பர் 24 என்று அறிவித்திருக்கிறார்கள். ஏன் தள்ளிப்போனது? என்றால், டிசம்பர் 4 ஆம் தேதி ரஜினிமுருகன் படம் வருவதால் இந்தப்படம் தள்ளிப்போயிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ரஜினிமுருகன் வந்தால் என்ன? இதை ஏன் தள்ளிப்போடவேண்டும்? என்று கேட்டால், ரஜினிமுருகன் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமி பணநெருக்கடியில் இருக்கிறார் என்பதால் அவருடைய படம் வெளியாகிற நாளில் சூர்யா போன்ற பெரியநடிகரின் படம் வெளியானால் வசூலில் பங்குபோடவேண்டிய நிலை ஏற்படும். அதைத் தவிர்க்கவேண்டுமானால் இரண்டில் ஏதாவதொரு படம் வெளியானால்தான் நல்லது என்கிற நிலையாம்.

அதனால் உங்கள் படத்தைத் தள்ளிவைத்துக்கொள்ளவேண்டும் என்று சூர்யாவிடம் விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாம். அதை சூர்யா ஏற்றுக்கொண்டு படத்தைத் தள்ளிவைக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close