Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்ஜிஆர் போல் இப்போதைய நடிகர்கள் இல்லையே - ஒரு தயாரிப்பாளரின் வேதனை

2011 ஆம் ஆண்டு சரத்குமார், நிவின்பாலி ஆகியோர் நடிப்பில் மெட்ரோ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான படத்தைத் 'தென்னிந்தியன்' என்று பெயர் வைத்து தமிழ் பேச வைத்திருக்கிறார்கள். இந்தப்படம் மற்றும் புதுமுகங்கள் நடித்த 'சூரத்தேங்காய்' ஆகிய இரண்டு படங்களின்  பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பாடல்களை வெளியிட்டு கில்டு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும் போது-

"இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் 2 படங்கள் தயாரித்துள்ள தயாரிப்பாளர் முத்துக்குமாரைப் பாராட்டுகிறேன்.'கோலி சோடா' சின்னபடம்தான். அது 40 கோடி லாபம் சம்பாதித்தது சிறு படங்கள் வர வேண்டும். சில படங்களில் நடித்துள்ள 'சூரத்தேங்காய்' நாயகன் அரவிந்த் நன்றாகத்தான் இருக்கிறார் .அவர் தமிழனாக இருப்பதால் மேலே வர முடியவில்லை. இது தான் நம் நாட்டு நிலைமை. இங்கே இதைப் பேசக்கூடாது என்றிருந்தேன் ஆனால் பேசவேண்டியிருக்கிறது.

ஆந்திராவில் புயல்,வெள்ளம் வந்த போது எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்கிற பட்டியலைப் பார்த்தேன். இங்கே கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.நம் தமிழ்நாட்டில் நடிகர்கள் யார் எவ்வளவு கொடுத்தார்கள்? ஒன்றுமே இல்லை. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

தமிழ்நாட்டில் எல்லாம் இழந்து சொந்த நாட்டிலேயே தமிழ்மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள் . நான் எம்.ஜி.ஆர். வீட்டிலேயே மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அவர் அள்ளி அள்ளிக் கொடுத்தார். அவருக்குள்ள மனம் ஏன் இப்போது இவர்களுக்கு இல்லை?. தயவு செய்து கொடுத்து உதவுங்கள் நீங்களும் உயர்வீர்கள்.

எங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் சிறுபடங்கள் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறோம். எப் எம் எஸ் என்கிற வகையில் 120 நாடுகளுக்குப் நம் படங்கள் போகின்றன ஆனால் 10 லட்சம் கொடுத்து நம்மை ஏமாற்றிவிடுகிறார்கள். இது மாற நடவடிக்கை எடுப்போம்." என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close