Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் படத்தை அவர் மனைவி இயக்குவாரா?

ராஞ்சனா படத்தில் நடித்த ஸ்வாரா பாஸ்கர் நடிப்பில் உருவான “நில் பட்டே சனட்டா” என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறார் தனுஷ். இப்படத்தை தமிழில் ஆனந்த் ராயுடன் இணைந்து தயாரிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியில் ஸ்வாரா பாஸ்கர் நடித்த கேரக்டரில் தமிழ்ரீமேக்கில் அமலாபால் நடிக்கவிருக்கிறார்.  இப்படம் அம்மாவுக்கும் மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டம் மற்றும் இருவரின் வாழ்க்கை என்னவாக இருக்கும் என்பதை மையமாக கொண்ட கதைத்தளம். எனவே அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவைப்பதற்கு ரேவதியிடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியின் பிரபல இயக்குநரான நிதிஷ் திவாரியின் மனைவியான அஸ்வினி அய்யர் இப்படத்தை இயக்கியிருப்பார். தமிழிலும் அவரே இயக்குவாரா அல்லது தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. தமிழுக்கு ஏற்றாற் போல இப்படம் ரீமேக் செய்தால் நிச்சயம் விருதும் வெற்றியும் உறுதி என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close