Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவை இசைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் இசையமைப்பாளர்கள்

2016 ஆம் ஆண்டை புதுவருடத்தை  இசையால் வரவேற்கவிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். சென்னை மற்றும் கோவையில் லைவ் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில், “ நாட்கள் நகர்ந்தது, நேரம் வந்துவிட்டது. பொங்கல் பண்டிகை நாளை அடுத்து சென்னை, கோவையில் ஒரு தமிழ் இசைத் திருவிழா” என்று ட்விட் செய்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் தீபிகா படுகோன், ரன்பிர்கபூர் நடிப்பில் தமாஷா என்ற இந்திப் படம் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து சிம்புவின் “ அச்சம் என்பது மடமையடா” மற்றும் சூர்யா நடிக்கும் 24 படத்திற்கும் இசையமைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

கோவையில் யுவன்சங்கர்ராஜா லைவ் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மானும் இசைநிகழ்ச்சி நடத்தவிருப்பதை,  கோவை இசைப்பிரியர்கள்  புதுவருடத்தொடக்கத்திலேயே இரட்டை இசைவிருந்து என்று ட்விட்டரில் கூறிவருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close