Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளநிவாரண நிதி கொடுத்த பிரபு, சத்யராஜ், சிவகார்த்திகேயன்

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நிதி திரட்டி வருகிறது. விஷால், சூர்யாவைத் தொடர்ந்து பல நடிகர்களும் நாசரை சந்தித்து நிதி வழங்கிவருகின்றனர்.

இன்று பிரபு மற்றும் விக்ரம் பிரபு இணைந்து 5 லட்சமும், சத்யராஜ் மற்றும் சிபிசத்யராஜ் ஒன்றிணைந்து 2.25 லட்சமும், சிவகார்த்திகேயன் 5 லட்சத்திற்கான காசோலையையும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் ஒப்படைத்தனர். அப்போது, துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான நந்தா, பிரேம்குமார், ஹேமச்சந்திரன் உடன் இருந்தனர்.

முதலாவதாக நடிகர் சூர்யா, கார்த்தி ஒன்றிணைந்து 25 லட்சமும், விஷால் 10 லட்சமும், தனுஷ் 5 லட்சத்துக்கான காசோலையையும் நடிகர் சங்க தலைவர் நாசரிடம் முன்னர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்களுக்கு:


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close