Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர்ந்து உதவும் நடிகர்கள்

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பிலிருந்தும் உதவிகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. திரைப்படத்துறையினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துகொண்டிருக்கின்றனர்.

விஷால், கார்த்தி ஆகியோர் தலைமையில் பெரியகுழுவொன்று நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உதவிகள் செய்துகொண்டிருக்கிறது. நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அவர் சில இடங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகிறார்.

 இசையமைப்பாளர் இளையராஜா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகில் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவியுள்ளார். மேலும் அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.  மேலும்  நடிகர்கள் விக்ரம்பிரபு, சாந்தனு, மாதவன், தனுஷ், ஸ்ருதிஹாசன், குஷ்பு ஆகியோரும் டிவிட்டரில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர்.

களத்தில் இவர்கள் செய்யும் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் ஆறுதலாகவும் மேலும் பலருக்கு தங்களால் இயன்ற உதவியைச் செய்யவேண்டும் என்கிற ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக அவர்களுடன் இணைந்து பலரும் பல தகவல்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close