Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொண்டு நிறுவனங்களை உதவிக்கு அழைக்கும் சித்தார்த்!

சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் கனமழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு, அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற நிவாரணப் பொருட்களை சித்தார்த் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து தொடர்ந்து வழங்கிவருகின்றனர்.

அடுத்தக் கட்டமாக சித்தார்த், வண்டி முழுவதும் நிவாரணப் பொருட்களுடன் நாளை கடலூர் செல்கிறார். அங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகள் வினியோகிக்கவிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

எனவே எந்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வேண்டும் என்பதை சமுகவளைதளத்தில் குறிப்பிட்டுள்ள ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பதிவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தன்னார்வளர்களையும், தன்னார்வத் தொண்டுநிறுவனங்களையும் உதவிக்கு வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையைப் போலவே கடலூரும் அதிகப்படியாக பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close