Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள்னா சும்மா இல்ல- ராதிகா அப்தே நடிப்பில் அதிரடிக் குறும்படம்

அனௌக் போல்ட் இஸ் பியூட்டிஃபுல் - தி காலிங்.. அகல்யா குறும்படத்தையடுத்து ராதிகா அப்தே நடிப்பில் மீண்டும் ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது. பெண்கள் தைரியமாக எதையும் சந்திக்க வேண்டும் என்பதே அந்த குறும்படத்தின் ஒன்லைன்.

  ராதிகா அப்தே கர்ப்பமாக இருக்கிறார். மேலும் ஒரு பெரிய நிறுவனத்தில் கட்டிடக் கலை நிபுணராக பணியாற்றுகிறார். அவருடைய புரமோஷனுக்காக காத்திருக்கிறார். எனினும் ராதிகா அப்தே கர்ப்பமாக இருப்பதாலேயே புத்திசாலியான உழைப்பாளியாக இருந்தும் அவருக்கு பிரமோஷன் சந்தேகமாக உள்ளது. மேலும் உயரதிகாரி ராதிகா அப்தேவை பார்த்து இந்த மேல் கோட் உனக்கு கச்சிதமாக இருக்கிறது. உனது வயிறும் தெரியவில்லை என சொல்ல. ராதிகா சற்றே கோபத்துடன் அமைதியாகிறார். 

என்னோட வேலைக்கும் என் குழந்தைக்கும் என்ன சம்மந்தம் எனக் கேட்கிறார். கண்டிப்பாக உன் குழந்தை பிறப்புக்குப் பிறகு உன் புரமோஷன் குறித்து யோசிக்கலாம். இது கம்பெனியின் முடிவு எனக் கூற ராதிகா அப்தேவின் வீட்டிலோ புது கம்பெனிக்கான வேலைகள் நடந்துவருகின்றன.

ராதிகா அப்தே நான் என் வேலையை ராஜினாமா செய்கிறேன் இது என் புதுக் கம்பெனிக்கான கட்டிட வேலைகள் தான் என தன்னம்பிக்கையாக சொல்லிவிட்டு இறங்கிக்கொள்கிறார். மேலதிகாரி ஆச்சர்யத்துடன் பார்க்க படம் முடிவடைகிறது. மிகச் சில வினாடிகளில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் பெண்களுக்கு நடக்கும் பிரச்னைகள் பலவற்றில் ஒன்றான கர்ப்பாமாதல் அதனால் வேலைக்கும் உண்டாகும் இடையூறுகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறது. 

 

குறும்படத்தைக் காண:

எடிட்டர் சாய்ஸ்

[X] Close