Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எளிமையாக நடந்த பிரமாண்ட எந்திரன்2 தொடக்கவிழா?

ரஜினி இப்போது கபாலி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதேநேரம் இன்று அவருடைய அடுத்தபடமான எந்திரன்2 தொடக்கவிழா மிகஎளிமையாகத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

(எந்திரன் பட கடைசி நாள் ஷூட்டிங் - கோப்பு படம்)

இன்றைய தேதியில் பெரியஅளவில் ஏவிம்-மில் எந்திரன்2 படத்தொடக்கவிழாவை நடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம். சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளப் பாதிப்புகள் காரணமாக அந்த நிகழ்ச்சியை ரத்துச் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்புநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்துகொண்டு அலுவலகத்தில் பூசை போட்டு மிக எளிமையாக நிகழ்ச்சியை முடித்துவிட்டார்களாம்.

இன்று பூசை அதைத் தொடர்ந்து பதினான்காம்தேதி முதல் படப்பிடிப்பு என்று திட்டமிட்டிருந்தார்களாம். இதற்காக அரங்கு அமைக்கும் வேலைகள் கடந்த பல நாட்களாகவே நடந்துவருகிறது. மழை நிலவரத்தையொட்டி பதினான்காம்தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜனவரி தொடக்கத்தில் அல்லது பொங்கல் கழித்து, ரஜினி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close