Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழையால் திரையுலகுக்கு 25 கோடி இழப்பு

கடந்த இருவாரங்களுக்கு மேலாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவருகிறது. இதனால் சென்னை மற்றும் கடலூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழகமே சோகத்தில் மூழ்கியது. இதனால் திரைப்படத் துறையிலும் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக சென்னை மற்றும் கடலூர் பகுதியில் உள்ள சில திரையரங்குகளினுள் வெள்ளம் புகுந்தது. மேலும் சென்னையில் மழை காரணமாக பல மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கடந்த வாரங்களில் வெளியான “144” மற்றும் “உப்புகருவாடு” உள்ளிட்ட படங்களும் மழையின் காரணமாக சரிவர ஓடவில்லை.

அனுஷ்கா, ஆர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியான “இஞ்சி இடுப்பழகி” மற்றும் பாபிசிம்ஹா, கலையரசன் நடிப்பில் இந்தவாரம் வெளியான  “உறுமீன்”ஆகிய இவ்விரு படங்களுமே கனமழையின் காரணமாக வீட்டிலேயே ரசிகர்கள் முடங்கிக்கிடந்ததால் திரையரங்கில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

கடும் மழையின் காரணமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த படம் மற்றும் சமீபத்தில் வெளியான படம் வரை வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரைத்துறையில் ரூ25 நஷ்டம் ஏற்படதாக திரைப்பட விநியோகஸ்தர் கலைப்புலி எஸ்.சேகரன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் மழைபெய்துவருவதால் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. மேலும் இன்னும் வெள்ள பாதிப்பு குறைந்தபாடில்லை. வேதாளம் மற்றும் தூங்காவனம் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே கடைசியாக திரையரங்கில் ஓடி வசூல் சாதனை படைத்தது. அதற்கடுத்த வாரங்களிலேயே மழை பெய்ய ஆரம்பித்ததால் தியேட்டரின் இலாப சதவிகிதம் மிகவும் குறைந்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்