Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவாவில் முன்கூட்டியே தொடங்கிய கபாலி படப்பிடிப்பு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் கபாலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி நடந்துவருகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் ஆரம்பித்து பின்னர் மலேசியாவில் தொடர்ந்து நடைபெற்றது. ரஜினியின் மலேசியா படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஹிட் அடித்தது. மலேசியா படப்பிடிப்பில் தன்ஷிகா, கலையரசன், அட்டகத்தி தினேஷ், ரித்விகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மலேசியாவில் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி நடந்துவருகிறது. திட்டமிட்டதைவிட முன்கூட்டியே படப்பிடிப்பு தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

கபாலி படத்தின் கதாநாயகியான ராதிகா ஆப்தே கோவா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தலைவருடன் முதன்முறையாக படப்பிடிப்பில் இருப்பதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.  பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

அங்கேயே அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தெறி படத்தின் படப்பிடிப்பும் நடந்துவருகிறது. இவ்விரண்டு படங்களுக்குமே தாணு தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்