Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பதினைந்துஇலட்சம் கொடுத்தார் கமல்

சென்னை மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடிகர்சங்கம் நிதி திரட்டிக்கொண்டிருக்கிறது. முன்னணிநடிகர்கள் உட்பட பலரும் நடிகர்சங்கத்திடம் தங்களால் இயன்ற தொகையைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்கு நடிகர் ஜீவா பத்துஇலட்சம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மழைவெள்ளம் பற்றி கமல் ஒரு பேட்டி கொடுக்க, அதற்கு தமிழகஅரசு சார்பில் கண்டனம் வந்தது. அதைத் தொடர்ந்து கமல் அதற்குப் பதில் சொல்லும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். இவ்வளவும் நடந்தது, ஆனால் வெள்ள நிவாரணத்துக்கு அவர் பணம் எதுவும் தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் கமல் சத்தமின்றி நடிகர்சங்கத்திடம் நிதி கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. நிதியாக பதினைந்துஇலட்சம் கொடுத்திருக்கிறாராம். இதற்கான காசோலை நடிகர்சங்கப்பொருளாளர் கார்த்தியிடம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!