Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யாவுக்கு செக் வைக்குமா நம்பர் சென்ட்டிமென்ட்?

சும்மாவே சென்டிமென்ட் பார்க்கும் சினிமா தொடர்ந்து ஒரு சென்டிமென்ட் ஃபெயிலியர் ஆனால் விடுமா? இப்போது அந்த செண்ட்டிமெண்ட் எட்டிப் பார்ப்பது... சூர்யாவின் ’24’ படத்துக்கு!

அறை எண் 305ல் கடவுள், 49 ஓ, பத்து எண்றதுக்குள்ள , TN 07 4777, ஏழாம் அறிவு, 6 மெழுகுவர்த்திகள், 555 என தமிழ் சினிமாவில் நம்பர் டைட்டில் கொண்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரும் நம்பரைக் குவிப்பதில்லை. சூர்யாவின் டைம்மெஷின் ட்ராவல் படமான ’24’ படமும் நம்பர் டைட்டில் தான்.

 

படக்குழுவினர் இந்த சென்டிமென்ட் குறித்து விவாதித்தார்களாம். ஆனால், அதை சூர்யாவின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லையாம். ’மாஸ்’ படத்துக்கு வரிவிலக்குக்காக மாசு என பெயர் மாற்றிய குழப்பங்கள் சூர்யாவுக்குப் பிடிக்கவில்லையாம்.அதனால் 24 டைட்டிலை மாற்ற அவர் விரும்பமாட்டாராம்.

அதுவும்போக, சூர்யாவுக்கு இப்படியான சென்ட்டிமென்ட் மீது நம்பிக்கை இருக்காது என்பதாலும், அவர் இதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டாராம். எனினும் அத்திப் பூத்தாற்போல் இந்த நம்பர் செண்டிமெண்டில் சிக்கி வெற்றிகண்ட 7ஜி ரெயின்போ காலனி, 13ம் நம்பர் வீடு படங்கள் போல் ‘நம்பர் செண்ட்டிமெண்ட்’ வரலாற்றை தன் டைம் டிராவல் மூலம் சூர்யா மாற்றிக் காட்ட வாழ்த்துகள்! 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
[X] Close