Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷின் அடுத்தபடம் கொடி இன்று தொடக்கம்

 எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை,செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதியபடத்தின் தீபாவளி முடிந்ததும் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. மழை வெள்ளம் காரணமாக அது தள்ளிப்போனது. இன்றைக்கு அந்தப்படத்தின் தொடக்கவிழா நடைபெற்றிருக்கிறது.

படத்துக்குக் கொடி என்று பெயரிட்டிருக்கிறார்கள். படத்தில் தனுஷ் இரட்டைவேடங்களில் நடிக்கவிருக்கிறார். அவற்றில் ஒரு வேடம் அரசியல்வாதி வேடம். என்பதால் அரசியல் சம்பந்தப்பட்ட கொடி என்ற பெயரை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தப்பெயரை வைக்கலாம் என்று முடிவுசெய்தபோது வேறொருவர் இந்தப்பெயரைப் பதிவுசெய்து வைத்திருந்தாராம். அவரிடமிருந்து தலைப்பை விலைக்கு வாங்கிவிட்டார்களாம். முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.    

 
 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close