Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘பீப்’ பாடலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -அனிருத் விளக்கம்

சமீபத்தில் சிம்பு , அனிருத் உருவாக்கியதாக சொல்லப்பட்ட பீப் பாடல் இணையத்தில் வெளியாக சர்ச்சைகள் தினந்தோறும் வெடித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சிம்பு என் சொந்த விஷயங்கள் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறினார்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்ததாக கூறப்பட்டு வந்த அனிருத் தற்போது அதை மறுத்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிலில்

             வணக்கம். நான் தமிழ் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பித்த டொரன்டோ கச்சேரியின் வேலையில் மூழ்கி இருந்தேன். " பீப் சாங்" பற்றிய என்னுடைய நிலையை நான் இப்போது தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நான் அந்த பாடல் வரிகளை எழுதவில்லை , இசையமைக்கவில்லை , பாடவும் இல்லை. எதிர்பாராதவிதமாக என்னுடைய பெயர் இந்த சர்ச்சையில் இழுத்துவிடப்பட்டுள்ளது. எனக்கு பெண்கள் மேல் மிகப்பெரிய அளவில் மரியாதை உள்ளது என்பதை நான் இசையமைத்த பாடல்களின் மூலம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

விரும்பத்தகாத இந்த விஷயத்துக்காக நான் மிகவும் வருந்தி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

அன்புடன்

அனிருத்

என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் சிம்புவின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததிலும் இப்பாடல் வானம் படத்தின் போது உருவாக்கப்பட்டது. மேலும் அப்போதெல்லாம் அனிருத் திரையுலகில் அறிமுகமாகக் கூட இல்லை. இது வேறு ஒருவர் இசையமைத்தது. மேலும் இதே பாணி சிம்பு 100க்கும் மேலான பாடல்களை உருவாக்கி தன் சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அனிருத் பெயர் எப்படி இதில் வந்தது என ஆச்சர்யமாகவும் கேட்கிறார்கள். 

இப்படி இருக்கும் பட்சத்தில் சிம்புவே தன் பேட்டிகளிலோ அல்லது பத்திரிகை செய்திகளிலோ ஏன் அனிருத்துக்கும் இந்தப் பாடலுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை தெளிவுபடுத்தவில்லை என்கிற கேள்வி வருகிறது. இதுமட்டுமின்றி, டி.ராஜேந்தரும் தனது புகாரில் அனிருத்தை இணைத்தே மனு தயாரித்திருப்பது இன்னும் வியப்பான ஒன்றே.

யாரைத்தான் நம்புவதோ?

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close