Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தத்தெடுக்கும் சூர்யா, மணிரத்னம்

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில்  நிவாரணப்பணிகளில் திரையுலகினர் முனைப்பாக இருந்தனர். அவற்றைத் தொடர்ந்து இப்போது அடுத்த கட்டத்தை நோக்கியும் சென்றிருக்கின்றனர்.

இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் அவர்களின் நாம் இயக்கத்தின் சார்பாக சென்னை கோட்டுர், கோட்டுர் புரத்தில் உள்ள சூர்யா நகரை தத்தெடுத்துள்ளனர். தமிழக அரசு வேண்டிய நிவாரண உதவிகளை செய்து வரும் இந்நிலையில் நாம் இயக்கம் அரசுக்கு தோள் கொடுத்து உதவும் வகையில் பணியைச் செய்து வருகிறது.

சூர்யா நகரை தத்தெடுத்தபின் முதல்கட்டமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர் இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் தலைமையிலான நாம் குழுவினர். மேலும் மருத்துவ உதவிகள், கலந்தாய்வுகள் உட்பட பல உதவிகளை தொடர்ந்து செய்யவுள்ளனர் என்று அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பாக 3 கிராமங்கள் தத்தெடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.  இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கை:
 
"திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்வாய், கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை அகரம் அறக்கட்டளை தத்தெடுக்கும். இருளர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் இப்பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
இப்பகுதிவாசிகளுக்கு எவ்வித அடையாள அட்டையும் இல்லாததால் எவ்வித அரசாங்க உதவிகளையும் அவர்களால் பெற முடியவில்லை. அப்பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. அவர்கள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியுறுகின்றனர்" என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்