Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தர்மதுரை ஃபர்ஸ்ட் லுக் அன்றே ஃபர்ஸ்ட் பிரச்னை!

விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் படம் தர்மதுரை. அப்படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதே நேரம் 2014ல் ஆனந்த் குமரேசன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒப்பந்தமான திரைப்படம் வசந்தகுமாரன். இவ்விரு படங்களுக்குமே தயாரிப்பு நிறுவனம் “ஸ்டூடியோ 9” .

வசந்தகுமாரன் திரைப்படத்தை பாதியிலேயே கைவிட்டதாகவும், அடுத்த படத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாகவும் பட இயக்குநர்  ஆனந்த் குமரேசன் சமுகவலைதளங்களில் தயாரிப்பு தரப்பிற்கு ஐந்து  கேள்விகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர்கூறும்போது,

“வசந்தகுமாரன்” திரைப்படத்தை எழுதி இயக்குவதற்காக கடந்த டிசம்பர் 2012-ல் நான் ஒப்பந்தமாகினேன். பணிகளும் நடந்தன. பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் என்று வருடங்கள் நகர்ந்தன. தற்போது அத்திரைப்படம் கைவிடப்பட்டதாக ஊடகங்களின் மூலம் அறிகிறேன்.  “வசந்தகுமாரன்” திரைப்படத்திற்குப் பதிலாக “தர்மதுரை”என்கிற திரைப்படம் இன்று (டிசம்பர் 2015) படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக மீண்டும் ஊடகங்களின் மூலமே அறிகிறேன்.

பல்வேறு குழப்பங்களுக்கு ஆட்பட்டு, இதை நான் பதிவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளேன்…

1. வசந்தகுமாரன் திரைப்படம் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் கதாநாயகருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினை என்றே அறியப்படுகிறது. அது என்ன பிரச்சினை?

2. அந்த பிரச்சினை எப்படி முடிவுக்கு வந்தது?

3. பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தால், சம்மந்தப்பட்ட படம்தானே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக ஏன் ”வசந்தகுமாரன்” கைவிடப்பட்டது?

4. அதற்குப் பதிலாக தர்மதுரை என்கிற திரைப்படம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது?

5. இவை எதுவுமே தொழில் அடிப்படையிலோ அல்லது குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலோ கூட தயாரிப்பாளரோ அல்லது கதாநாயகரோ, தகவலாகவோ அல்லது என்னை அழைத்து நேரிலோ ஏன் என்னிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.?

நான் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தபொழுதும் அவர்களிடம் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. பதில்களே இல்லை என்பதுதான் உண்மை.
இப்பொழுது என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். மூன்று வருடங்களாகக் காத்திருந்த எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. சுமார் பன்னிரெண்டு வருட சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

ஒரு திரைப்படம் கைவிடப்பட்டு அதற்குப்பதிலாக இன்னொரு திரைப்படம் நடக்கும்பொழுது அது ஏன் என்று விளக்கமளித்து துறை சார்ந்தவர்களுக்கும், ஊடகங்களுக்கும் “அறிவிக்க” வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் எனக்காவது விளக்கமளிக்கவேண்டியது தார்மீக அடிப்படையில் உங்களது கடமை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நான் உங்களிடம் படமோ, பணமோ அல்லது பரிதாபமோ வேண்டி நிற்கவில்லை. தயாரிப்பாளருக்கும் கதாநாயகருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையில், ஒரு முதல் பட இயக்குனராகிய நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் பலியாக்கப்பட்டேன் என்பது குறித்த ஒரு முறையான விளக்கம் மட்டுமே” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சீனுராமசாமியுடன் இடம்பொருள்ஏவல் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இணைந்திருக்கும் தர்மதுரை படத்திற்கான முதல்பார்வை வெளியான முதல்நாளே சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!