Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவுக்கே சவால் கொடுக்கும் 4G பெண்ணுக்கு காக்காமுட்டை சேலஞ்ச்!

சாஷா சேத்ரி... இந்தப் பெயர் உங்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால், இந்தப் பெயருக்குரிய பெண்ணை தினமும் குறைந்தது 10 முறையேனும் பார்க்காமல் இருக்க முடியாது! சேட்டிலைட் சேனல், கிரிக்கெட் ஒளிபரப்பு, ஃப்ளெக்ஸ் விளம்பரங்கள், பத்திரிகை, இணைய விளம்பரம் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் 4G பெண்தான் அவர்.

“4G சேலஞ்சுக்கு நீங்க ரெடியா? ஸ்மார்ட்போன் வச்சிருந்தா ஏர்டெல் மட்டுமே எடு” என தில் சவால் விடுக்குமே அந்தப் பெண்தான் சாஷா சேத்ரி.

4G விளம்பரம் காரணமாக இந்தியா முழுக்க செம பிரபலம் ஆகிவிட்டார் சாஷா. சரி... யார் இந்த சாஷா? 19 வயது சாஷா, டேராடூனைச் சேர்ந்தவர். மேற்படிப்புக்காக மும்பைக்கு வந்தார். அங்கு சேவியர் இன்ஸ்டியூட் ஆஃப் கம்யூனிகேஷனில் விளம்பரப்பிரிவில் பட்டம் பெற்றிருக்கிறார். பின்னர் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றியவர், அப்படியே விளம்பரங்களில் நடிக்க முயற்சித்திருக்கிறார். வாய்ப்புகள் சில வந்தாலும், அதைவிட இசை சாஷாவை ஈர்த்திருக்கிறது. இசைக்குழுக்களில் 'ரிக்ஷா ராணி' என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அப்போது மும்பையில் 4G விளம்பரத்துக்கென நடிகர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனத் தெரிந்து ஆடிஷன் சென்றிருக்கிறார்.

“நான் அன்று அந்தத் தேர்வுக்கு செல்லவே விரும்பவில்லை. ஏனென்றால், என் கூந்தலை அப்போதுதான் கட் செய்திருந்தேன். கிட்டத்தட்ட டாம் பாய் போல மிகவும் குறைவாக இருந்தது என் முடி. அதனால் அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இப்போது அந்த ஹேர்ஸ்டைல்தான் என் அடையாளமாகிவிட்டது!’’ என்கிறார் சாஷா சந்தோஷமாக.

தற்போது 4G விளம்பர வரிசை வைரலான பின்னர், அடுத்தடுத்து விளம்பர வாய்ப்புகள் சாஷா மொபைலை தீண்டுகிறது. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தன் இசைக்குழுவுடன் ஒரு  ஆல்பம் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறாராம் சாஷா.

4G விளம்பரம் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 20 ம் தேதி வரை மட்டும், 54,406 முறை ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் மொத்தமாக 475 மணி நேரம் திரையில் தோன்றியிருக்கிறார் சாஷா. அதே சமயம் சாஷாவை வைத்து, உலா வரும் ஜோக்ஸ், மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை. ஏர்டெல் நெட்வொர்க்கையும், இவரின் விளம்பரத்தையும் வைத்து களைகட்டுகின்றன கலாய்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை சாஷா.

அப்புறம் இந்த க்யூட் மாடல் பார்க்க விரும்பும் தமிழ் சினிமா என்ன தெரியுமா? - ‘காக்கா முட்டை’! படத்தின் டிரைலருக்காகவே அந்தப் படத்தைப் பார்க்க விரும்புகிறாராம்.

 

‘காக்கா முட்டை’ படத்தை சென்னை தியேட்டரில் பார்க்க சாஷாவுக்கு நாம் சேலஞ்ச் கொடுப்போம். ஏற்றுக் கொள்கிறாரா என பார்க்கலாமா?

- ஞா.சுதாகர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close