Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துப்புரவுத்தொழிலாளர்களுக்கு தங்குமிடம் கொடுத்த ரஜினி

    சென்னை மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், சென்னை நகரில் மலைபோல் குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்ற தமிழகம் முழுவதிலுமிருந்து துப்புறவுத்தொழிலாளர்கள் சென்னைக்கு வந்திருக்கின்றனர்.

அவர்களுக்குச் சரியான தங்குமிடவசதிகள்செய்து தரப்படவில்லையென்று புகார்களும் வந்தன. ஒரு துப்புரவுத்தொழிலாளி உயிரிழந்த நிகழ்வும் செய்திகளில் வந்தது.

இந்நிலையில், கோடம்பாக்கத்திலுள்ள தனக்குச் சொந்தமான ராகவேந்திராதிருமணமண்டபத்தில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த துப்புரவுத்தொழிலாளர்கள் தங்கிக்கொள்ள இடம்கொடுத்திருக்கிறாராம் ரஜினி.

நாமக்கல், மேலூர், கரூர், ஓசூர், சேலம், ராசிபுரம், ஆத்தூர், தர்மபுரி, திண்டிவனம், எடப்பாடி, பள்ளிபாளையம், மேட்டூர், திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை வந்திருக்கிற தொழிலாளர்களுக்கு ராகவேந்திராமண்டபத்தில் தங்கஇடமும் அவர்களுக்குத் தேவையான அனைத்துவசதிகளும் செய்து தரப்பட்டிருப்பதாக ரஜினி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்