Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எதிர்ப்பாளர்களை மீண்டும் கோபப்படுத்திய சிம்பு

ஒற்றை பீப் பாடல் வெளியானது தான் தாமதம் சென்னை வெள்ளம், நிவாரணப் பணி ஆகிய அனைத்தையும் மறந்து தமிழ்நாட்டு மக்களை முழுவதுமாக இந்தப் பாடல் குறித்துப் பேச வைத்துவிட்டார் சிம்பு. இந்நிலையில் வருகிற டிசம்பர் 19ம் தேதி போலீஸாரிடம் ஆஜராகும் படி சிம்புவுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

வாலு படம் வெளியாகாத வேளையில் பலரும் சிம்புவுக்கு ஆறுதலாக ஆதரவு தெரிவித்தனர். விஜய் ஒரு படி மேலே சென்று பண உதவியாகவே செய்து படத்தை வெளியிட உதவி புரிந்தார். ஆனால் இப்போது நடக்கும் பிரச்னைக்கு எந்த ஒரு நடிகரும் சிம்புவுக்கு ஆதரவுக் கரம் அளிக்கவில்லை என்ற போதே அவர் உண்மை நிலையை உணர்ந்திருக்க வேண்டும்.

இவ்வேளையில் சிம்புவுக்கு வைரமுத்து. கங்கை அமரன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று சிம்பு தனது அட்மின் பயன்பாட்டில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் இன்னும் கோபத்தை உருவாக்கும் வண்ணம் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சட்டத்தை சந்திக்கத் தயார். மறைந்துகொள்ளவோ, ஓடவோ எதுவுமில்லை. கடவுளை நான் நம்புகிறேன். அவர் பார்த்துக்கொள்வார். நேர்மையிலும் உண்மையிலும் அதீத நம்பிக்கை இருக்கிறது. கடவுள் ஆசீர்வாதங்கள் எனக் கூறியுள்ளார்.

உண்மையில் இவர் தெரிந்துதான் இந்த பகிர்வை போட்டுள்ளாரா என நமக்கு சந்தேகமே எழுகிறது. இன்னமும் அவர் செய்த தவறை அவர் உணரவில்லை என்றே பலரும் இப்போது சாடத்துவங்கியுள்ளனர். திருட்டுத்தனமாக வெளியிட்டது குற்றம் தான். உண்மையில் இப்படி ஒரு பாடல் கிடைத்ததால் தானே அந்தத் திருட்டுத்தனமும் நடந்திருக்கும் என பலரும் சிம்புவுக்கு எதிர்ப்பலைகளை காட்டத்துவங்கியுள்ளனர். மேலும் நடிகர் சங்கமும் இது குறித்து ஒரு கருத்தோ, ஆதரவுக் கரமோ நீட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close