Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக வீர விளையாட்டை எதிர்க்கும் ரஜினியின் நாயகிகள்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதித்திருக்கும் தடையை அரசு தொடரவேண்டுமென்று பாலிவுட், கோலிவுட் நடிக நடிகைகள் கூறியுள்ளனர்.

‘விலங்குகள் உரிமைகளுக்காக வாதிடும் குழு’ என்ற விலங்குகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, காளைச்சண்டை, மாட்டுவண்டிப் பந்தயம் உள்ளிட்ட காளை மாடுகளை பயன்படுத்தும்  போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசு மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை இணைக்கும் வகையில் சில திருத்தங்களைச் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘ஜல்லிக்கட்டு’ போட்டியின்போது காளை மாடுகள் மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்படுகிறது. மேலும் வீரர்களால் காளை மாடுகள் துரத்திச்செல்லப்பட்டு உதை, குத்து, தரையில் தரதரவென இழுத்துச்செல்லுதல், கத்தியால் குத்துதல் என பல்வேறு கொடூரங்களுக்கு உள்ளாகிறது.

பொதுமக்கள், பார்வையாளர்கள் காயம் அடைதல் மற்றும் உயிரிழப்புக்கு உள்ளாகும் சூழலும் ஏற்படுகிறது. ஆகவே விலங்குகள் நலன் மற்றும் மனித பாதுகாப்பு கருதி, காளைகளைக் பாதுகாக்க ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட காளை மாடுகள் சார்ந்த போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையைத் தொடரவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவினை, ஏராளமான ஆதரவு கையெழுத்துக்கள் வாங்கி விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளது.

இந்த மனுவில் பிரபல நடிகைகள் வித்யா பாலன், பிபாஷா பாசு, சோனாக்ஷி சின்ஹா, ஷில்பா ஷெட்டி, ரவீனா தாண்டன், எமி ஜாக்சன், ஜாக்குலின் பெர்னான்டஸ், ரிச்சா சதா, நடிகர்கள் ஜான் ஆபிரகாம், சோனு சூட், வித்யூத் ஜம்வால், ததானி, கபில் சர்மா ஆதித்யா ஷெட்டி உள்ளிட்ட பிரபல நடிகர்-நடிகைகளும்  கையெழுத்துப் போட்டு ஜல்லிக்கட்டுக்கான தடையைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.