Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மழை கடவுள் கொடுத்த தண்டனை - இளையராஜா நெகிழ்ச்சி!

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பின்னரும் தங்களால் முடிந்த உதவிகளையும் , நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர் . தமிழக திரைத்துறையினரும் பல்வேறு குழுக்களாக செயல்பட்டு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர் .

அந்த வகையில் நேற்று சென்னையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ( பெப்சி ) சார்பில் பாதிக்கப்பட்ட திரைப்படத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . இந்த விழாவில் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கிய இசைஞானி இளையராஜா செய்தியாளர்களிடம் பேசிய போது, "இந்த மேடை விளம்பரத்திற்கான மேடை அல்ல , கொடுப்பவர்களின் கரங்களும் வாங்குபவர்களின் கரங்களும் ஒரே மாதிரியாக உள்ளன .

நாம் எங்கேயோ எதுவோ தவறு செய்திருக்கிறோம். இறைவன் நினைத்திருந்தால் சுனாமி போன்ற பேரழிவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், ஐம்பூதங்களில் ஒன்றான நீர் மூலம் கஷ்டப்படுத்தி இருக்கிறான். இந்த மழைதான் மனிதநேயத்தையும் வளர்த்திருக்கிறது. இது நாள் வரை பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என தெரியாமல் வாழ்ந்த சூழலில் இப்போது அந்த வீட்லயும் நிறையப் பேர் சாப்பிடாம இருக்காங்க அவங்களுக்கும் கொண்டு போய்க்  கொடுங்கன்னு மக்கள் கூறுகிறார்கள்" எனக்கூறினார்.

நடிகர் சங்கத் தலைவர் நாசர் நிவாரணப் பொருட்களை வழங்க வந்தபோது மின்சாரம் தடைபட்டது. இதனால் அருகில் இருந்தவர்களின் அலைபேசி ஒளியில் நிவாரணப் பொருட்களை வழங்கி சென்றார் . இந்தநிகழ்வில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு , பெப்சி தலைவர் சிவா மற்றும் திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர் .

- க.பாலாஜி - 

 

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ( பெப்சி ) நடத்திய நிவாரண உதவிகள் - ஆல்பத்திற்கு க்ளிக்குக!

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்