Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகார்த்திகேயனுடன் மிட்நைட் ரைட் - சதிஷின் நடுங்கும் அனுபவம்!

அதிகாலை நாலுமணிக்கு சிவகார்த்திகேயனுடன் புல்லட் ரைட் அடித்துவிட்டு அதை டிவிட்டரில் அப்போதே நடிகர் சதிஷ் பகிர்ந்துவிட அது செம பரபரப்பை கிளப்பியுள்ளது. இது பற்றி நடிகர் சதீஷிடம் கேட்ட போது,
 
"சிவகார்த்திகேயன் அவர்களின் நண்பர் ஆர்.டி.ராஜா அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் சூட்டிங் ஈசிஆரில் நடைபெற்றது. நைட் ஷெட்யூல் நேற்று நடைபெற்றது. பி.சி.ஶ்ரீராமின் கேமரா, அட்லி அசிஸ்டெண்ட் பாக்யராஜ் கண்ணன் இயக்கிறார்.

அதிகாலை மூணு மணி அளவில் கொஞ்சம் ரெஸ்ட் கிடைத்தது அதான் அப்படியே டீ சாப்பிட்டு வரலாம்ன்னு சிவா சொல்லவும் கார் எடுத்துகிட்டு போகலாம்ன்னு  சொன்னோம். ஆனா அவர் கண்ணுல அவரோட ப்ரெண்ட் உதய சங்கர் பைக் கண்ணுல பட்டுடுச்சு. காக்கிசட்டை டைம்ல புல்லட் ஓட்டியது அதனால நம்ம அதில போவோம்,மத்தவங்க கார்ல வரட்டும்ன்னு சொல்லிட்டார்.
 
செம குளிர் சார், பின்னாடி உட்கார்திருந்த என்னாலேயே தாங்க முடியலை, நடுங்கிகிட்டே இருந்தேன். ஆனா அவர் ஜாலியா பைக்க ஓட்டிட்டு ஒரு  டீக்கடையில் போய் நிறுத்தினார். முதலில் கடைக்காரருக்கு அடையாளம் தெரியலை, டீ கொண்டு வந்து கொடுக்கும் போதுதான் கண்டுபிடிச்சாரு.

ஆனா அந்த நேரத்திலேயும் கார்ல போனவங்க அடையாளம் கண்டு பிடிச்சு வண்டியை திருப்பிகிட்டு வந்து போட்டோஸ் எடுத்துக்க ஆரம்பிச்சாங்க. ஷூட்டிங்கிற்கு வேற லேட்டாகிடுச்சு அப்ப பார்த்துதான் டீக்கடைக்காரர் 'இந்நேரத்துக்கு ரெண்டு பஸ்ஸு வரும் இன்னும் காணோம்'ன்னு தேட ஆரம்பிச்சாரு, சரித்தான்னு எஸ்கேப் ஆகிட்டோம்." என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close