Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதன்முறையாக செல்வராகவனோடு சேரும் அனிருத்

சிம்பு நடித்த கான் படத்தைப் பாதியிலேயே நிறுத்தினார் செல்வராகவன். அவர் அவருடைய தம்பி தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்காகவே அந்தப்படத்தை நிறுத்தினார் என்று சொல்லப்பட்டது. இப்போது அது உறுதியாகியிருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறதாம். இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதுவரை தன்னுடைய படங்களுக்கு யுவன்ஷங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஹாரிஸ்ஜெயராஜ் ஆகியோரையே இசையமைக்க வைத்திருந்தார் செல்வராகவன். ஹாரிஸ் இசையமைத்த இரண்டாம்உலகம் படத்துக்கு அனிருத் பின்னணிஇசை மற்றும் மூன்றுபாடல்களுக்கு இசையமைத்திருந்தார். முதன்முறையாக முழுமையாக செல்வராகவனோடு இப்போது பணியாற்றவிருக்கிறார்.  

 தங்கமகன் படத்தைத் தொடர்ந்து இந்தப்படத்திலும் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. டிசம்பர் கடைசியில் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கொடி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

அந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு நடுவிலேயே இந்தப்படத்தில் நடிப்பதற்கும் தேதி கொடுத்திருக்கிறாராம் தனுஷ். செல்வராகவன், தன்னுடைய கடந்த படங்களைப் போல இந்தப்படத்துக்கு அதிகநாட்கள் எடுத்துக்கொள்ளாமல் வேகமாகப் படத்தை முடித்துவிடுவார் என்றும் சொல்கிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்