Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜித்தின் அடுத்தபடத்தைத் தயாரிப்பவர் இவர்தான்?

  அஜித் இப்போது மூன்றுஅறுவைசிகிச்சைகள் செய்துகொண்டு ஓய்வெடுத்துவருகிறார். அதேசமயம் அவருடைய அடுத்தபடம் பற்றிய பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள். அடுத்தும் அவர், வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்திலேயே நடிக்கவிருக்கிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வந்துவிட்டன.

அந்தப்படத்தைத் தயாரிக்கப்போவது யார்? என்று இதுவரை சொல்லப்படவில்லை. மீண்டும் ஏ.எம்.ரத்னமே தயாரிக்கவிருக்கிறார் என்று சிலரும் வேறு தயாரிப்பாளருக்குத்தான் படம் நடிக்கப்போகிறார் என்று சிலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது அஜித் அடுத்தபடத்தின் தயாரிப்பாளரை முடிவுசெய்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அவரை வைத்து பில்லா2 படமெடுத்த சுரேஷ்பாலாஜிதான் அஜித்தின் அடுத்த தயாரிப்பாளர் என்று சொல்கிறார்கள். அவரை அழைத்து அஜித் பேசிவிட்டதாகத் தெரிகிறது. அவரும் படத்தைத் தயாரிக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். அடுத்தகட்டமாகச் செய்யும் வேலைகள் குறித்து பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம். அனேகமாக மே அல்லது ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது.  

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்