Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாட்ரிக் அடிப்பாரா துல்கர்?

நித்யா மேனனுடன் 100 டேஸ் ஆஃப் லவ் மற்றும் ஓகே கண்மணி இவ்விரு படங்களே துல்கருக்கு இந்த வருடம் ரிலீஸான படங்கள். இரண்டுமே ஹிட் அடித்த நிலையில் மூன்றாவது படத்தையும் ஹிட் ரேட்டிங்கில் தக்கவைக்கும் திட்டத்தில் கவனமாக இருக்கிறார் துல்கர்சல்மான்.

துல்கர்சல்மானை வைத்து ஏபிசிடி படத்தை இயக்கிய மார்டினின் அடுத்த படைப்பு தான் சார்லி. பெங்களூர் டேஸ் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் துல்கருக்கு ஜோடியாக இணைந்திருக்கிறார் பார்வதி. இப்படத்திற்கான முதல்பார்வை டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஹிட்டடித்திருக்கிறது.

காதல் படங்களில் மற்றுமொரு வெரைட்டியே சார்லி. தாடியுடன் துல்கரும், மூக்குத்தியுடன் பார்வதியும் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கான வேலைகள் சென்னையில் நடந்துவருகிறது. இதற்கு நடுவே ஒலியமைப்பு திருவனந்தபுரத்திலும், சில தொழில்நுட்பவேலைகள் கொச்சியிலும் மும்பையிலும் நடந்துவருகிறது. சரியான நேரத்திற்கு படம் வெளியாகவே இந்த ஏற்பாடுகள் என்று கூறியுள்ளார் இயக்குநர் மார்டின்.

இரண்டு பேருக்கு நடுவிலான கதையே சார்லி. எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் ஹீரோவாக சார்லி (துல்கர்), கிராஃபிக் கலைஞராக டெஸ்ஸா (பார்வதி) இவர்களுக்கிடையேயான காதலே இப்படம் என்று சொல்லப்படுகிறது. டிசம்பர் 24ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close