Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பீப் பாடல் பற்றி ரஜினியிடம் கேளுங்களேன் - கங்கைஅமரன் காட்டம்

சென்னை வெள்ள நிவாரணம் சார்ந்த பாராட்டு விழாவில் இளையராஜா கலந்துகொண்டபோது, சிம்புவின் பீப் பாடல் குறித்து கேள்வியை செய்தியாளர் எழுப்ப இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தற்பொழுது பரபரப்புடன் பேசப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இசையமைப்பாளர் கங்கைஅமரன் இதுபற்றி சமுகவலைதளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில், “ இளையராஜா போன்ற இசைப்பெரியோர்களிடம் எதைப்பற்றி கருத்துகள் கேட்பது என்ற வரம்பு வேண்டும். அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை இந்த முட்டா பீப் பசங்க போட்ட பாட்ட பத்தி அவர் கிட்ட கேட்டது எனக்கு புடிக்கல.

ஏன் ரஜினி சாரோட சொந்தக்காரப் பையன் தானே அனிருத்து...? அவரக்கேளுங்க ஏன் தமிழ் தமிழ்னு உசுர விடராரே அந்த வெங்காயத்தோட அப்பா டி ஆர். அவங்க அபிப்ராயம் என்னன்னு கேட்டுப் போடுங்க என் அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களே உண்மையாக உயர்ந்தோரை உள்ளம் கொதிக்க வைக்க வேண்டாம்” இவ்வாறு கங்கைஅமரன் கூறியுள்ளார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.