Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூலோகம் படத்தால் வந்த குழப்பம்

 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட படம் ஜெயம்ரவி நடித்திருக்கும் பூலோகம். அந்தப்படம் தயாராகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. பலமுறை வெளியீட்டுத்தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட அந்தப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜெயம்ரவி நடித்த தனிஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் நடிப்பில் இந்தப்படம் வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது படக்குழுவினரின் கருத்து. அதனால் யாருமே எதிர்பாராவண்ணம் டிசம்பர் 15 ஆம் தேதியன்று இந்தப்படம் 24ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் டிசம்பர் 24 அன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்த இரண்டு படங்கள் தடுமாறிப்போயிருக்கின்றன.

ஏற்கெனவே டிசம்பர் 24 அன்று பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்திருக்கும் பசங்க2, இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள வில்அம்பு மற்றும் விமல் நாயகனாக நடித்திருக்கும் அஞ்சல ஆகிய படங்கள் வெளியாவதாகச் சொல்லப்பட்டிருந்தது. திடீரென பூலோகம் வருவதாகச் சொல்லப்பட்டிருப்பதால் திரையரங்குகள் அந்தப்படத்துக்கு முன்னுரிமை தரத்தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் அஞ்சல படத்தைத் தள்ளிவைத்துவிட்டதாக அறிவித்துவிட்டார்கள். வில்அம்பு படத்தையும் தள்ளிவைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். பசங்க2 மட்டும் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. எனவே டிசம்பர் 24 அன்று பசங்க2 மற்றும் பூலோகம் ஆகிய இருபடங்கள் மட்டும் வெளியாகும் என்று தெரிகிறது.

பூலோகம் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர்ரவிச்சந்திரனுக்கு பொருளாதாரச்சிக்கல்கள் இருப்பதால் அப்படம் வெளியாவது கடைசிவரை சந்தேகம்தான் என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒருவேளை அந்தப்படம் வெளியாகாமல் போனால், பல வாரங்களாக டிசம்பர் 24 வெளியீடு என்று சொல்லிக்கொண்டிருந்த வில்அம்பு மற்றும் அஞ்சல படங்களைத் தள்ளிப்போட்டதுதான் மிச்சம் என்றாகிவிடும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!