Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பீப் வார்த்தைக்கும் சிம்புவுக்கும் சம்பந்தமில்லை - நீதிமன்றத்தில் புதிய மனு

சிம்பு பாடிய பீப் பாடல் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் பலரும் சிம்பு மற்றும் அனிருத் இருவர் மீதும் வழக்குப் பதிந்துள்ளனர். இந்நிலையில் வழக்குகளை ரத்து செய்யக்கோரி சிம்பு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில்...

சிம்பு ஒரு இசைப்பிரியர். நிறையப் படங்களில் பாடல்கள் உருவாக்கியுள்ளார். நிறைய ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.இதனிடையில் நிறையப் பாடல்களை எந்தப் படத்திலும் வெளியிடாமல், தனது சொந்தப் பயன்பாட்டிற்காக உருவாக்கி வைத்துள்ளார். யாரோ ஒரு விஷமி சிம்புவின் வெளிவராத ஒரு பாடலைத் திருடி அதில் பெண்களை கொச்சைப் படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

புகார் மனுவில் தெரிவித்துள்ளதுபடி சிம்பு எந்தப் பாடலையும் அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை. மேலும் சிம்புவுக்கு பெண்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. இதுவரை பெண்களைக் கீழ்த்தரமாகப் பாவிக்கும் வார்த்தைகளை பாடல்களில் பயன்படுத்தியதில்லை. மேலும் வெளியாகியுள்ள சம்மந்தப்பட்ட பாடலில் யாரோ திருட்டுத்தனமாக வார்த்தைகளை கையாண்டுள்ளனர். இதற்கும் சிம்புவுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சிம்பு தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை ஆராயும் நோக்கம் நமக்கல்ல. எனினும் சிம்புவே தனது பதிலில் நான் உருவாக்கிய பாடல் தான் ஆனால் அவை என் சொந்தப் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பாடல். அதில் மற்றவர்கள் நுழைய அதிகாரம் இல்லை எனவும் மேலும் நான் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை நான் எதையும் சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் என கூறியிருந்தது நாமறிந்ததே. எதை நம்புவது இப்போது என்பது குழப்பமாகவே உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்