Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்படத்திலேயே மூன்றுநாயகிகள்- நாசர் மகனின் அதிர்ஷ்டம்

2012 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ணவேணிபஞ்சாலை படத்தை இயக்கிய தனபால்பத்மநாபன் இப்போது அடுத்தபடத்தை இயக்கவிருக்கிறார்.

அந்தப்படத்தில் நடிகர்சங்கத்தலைவர் நாசரின் மகன் லுத்புதின்பாஷா முதன்முறை கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இவர், இயக்குநர் விஜய்யின் சைவம், இதுஎன்னமாயம் ஆகிய படங்களில் சின்னவேடங்களில் நடித்தவர். இப்போது தனபால்பத்மநாபன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக காக்காமுட்டை ஐஸ்வர்யா நடிக்கவிருக்கிறார். சரபம் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் சலோனிலுத்ராவும் படத்தில் இருக்கிறாராம்.

இவ்விருவர் தவிர இன்னொரு நாயகியும் படத்தில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி இப்போது முன்னணிநகைச்சுவைநடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டிருக்கும் சதிஷ் மற்றும் கருணாகரன் ஆகிய இருவரும் இந்தப்படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க சிங்கப்பூரிலேயே நடக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!