Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இது போன்ற பாடல்களைத் திணிக்காதீர்கள்- சிம்பு மீது சினேகா கோபம்!

கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சினேகா, சிம்புவின் சர்ச்சைக்குரிய பீப் பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு பாடலை ஹிட்டாக்குவது நாம் தான். பெண்களை வருணிக்கும் பாடல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அடிடா அவள பாடல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு பாடலை நாமே பேசிப் பேசி தான் ஹிட் ஆக்கிவிடுகிறோம். இதனால் தான் கேட்கவேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். பீப் பாடலை நிஜமாகவே நான் இன்னும் கேட்கவில்லை.

இப்போது நீங்கள் கேள்வி கேட்டு என்னைக் கேட்க வேண்டுமென தூண்டிவிட்டீர்கள். இப்படித்தான் ஒரு பாடல் ஹிட் ஆகிவிடுகிறது. இளையராஜாவிடமும் இதைத்தான் கேட்கிறீர்கள். உங்களுக்கே தெரிகிறது அது தவறான பாடல் என்று. பின்னர் ஏன் அதைப்பற்றி கருத்து கேட்கிறீர்கள்? நீங்கள் கருத்து கேட்காமல், விமர்சனம் செய்யாமல் இருந்திருந்தால் இந்த பாடல் ஹிட் ஆகியிருக்காது.

இந்த பாடல் ஹிட் ஆனது உங்களால்தான். நீங்கள் தான் தேவையில்லாமல் பப்ளிசிட்டி கொடுக்கிறீர்கள். ஒரு பெண்ணாக இது மாதிரி பாடலை நான் எதிர்க்கிறேன். குழந்தைகள் பாடலை கேட்கிறார்கள். சமுதாயத்துக்கு நல்ல பாடலை கொடுங்கள். இந்த மாதிரி பாடலை திணிக்காதீர்கள்'' என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)