Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரண்மனை2 தள்ளிப்போகிறது?

2016 பொங்கல்நாளில் பாலாவின் தாரைதப்பட்டை, விஷாலின் கதகளி, சுந்தர்சியின் அரண்மனை2 மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒருபடம் தள்ளிப்போகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சுந்தர்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரண்மனை2 படத்தைத் தள்ளிவைக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இரண்டுவாரங்கள் தள்ளி வெளியிடவிருப்பதாகவும் சொல்கிறார்கள். இதனால் பிப்ரவரியில் தன் படத்தை வெளியிட நினைத்திருந்த உதயநிதி, பொங்கலன்று படத்தை வெளியிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

வழக்கமாகப் பொங்கல் பண்டிகையின்போது  நிறைய விடுமுறைகள் இருக்கும் என்பதால் அந்தநேரத்தில் தங்கள் படங்களை வெளியிட படத்தயாரிப்பாளர்கள் முனைப்பாக இருப்பார்கள். அதேநேரம் ஒரேநேரத்தில் நான்கு படங்கள் வெளியாவதால் சில சிக்கல்களும் இருக்கின்றனவாம்.

இதனால் கடைசிநேரம் வரை இந்தப்பட்டியலில் மாற்றம் நடந்துகொண்டேயிருக்கும் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். இப்போதைக்கு பொங்கல்போட்டியிலிருந்து அரண்மனை2 வெளியேறுவது, கெத்து உள்ளே வருவது என்று இருக்கிறதாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close