Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பசங்க 2 படத்தைப் பற்றி சூர்யா அதிகம் பேசாதது ஏன்?

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பாண்டிராஜின் பசங்க படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. அதில் பேசிய சூர்யா, சென்னையின் புதியஅடையாளமாக வெள்ளப்பாதிப்பில் தாமாக முன்வந்து மக்களுக்காகத் தொண்டாற்றிய ராதாஅம்மா, முகமுதுயூனுஸ் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மாறிவிட்டார்கள்.

இந்தப்பாதிப்பு நடந்து அதற்கான நிவாரணவேலைகளும் நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே பசங்க2 படத்தின் வேலைகளும் நடந்தன. நான் பசங்க2 பற்றி அதிகம் பேசவில்லை என்று பலரும் சொன்னார்கள். அதற்குக் காரணம் இதுதான், ஊரே பாதிப்பில் இருக்கும்போது நாம் படத்தைப் பற்றிப் பேசலாமா? என்கிற தயக்கம் எனக்கு இருந்ததால்தான் பேசவில்லை. இப்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிக்கிறோம் என்பதால் படவெளியீட்டை உறுதிசெய்திருக்கிறோம்.

படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோது எது மாதிரிப் படங்களைத் தயாரிக்கவேண்டும் என்று நினைத்தோமோ அதுமாதிரியே இந்தப்படத்தின் கதை இருந்தது. ஏற்கெனவே பசங்க என்கிற படத்தை எடுத்து தேசியவிருது வாங்கிய பாண்டிராஜ் இந்தப்படத்தை எங்களோடு இணைந்து உருவாக்க ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

இந்தப்படம் குழந்தைகளுக்கான படம். குழந்தைகளைப் படத்துக்குக் கூட்டிப்போவதென்றால் அனிமேஷன் படங்கள் மட்டுமே இருக்கின்றன. பலவருடங்களுக்குப் பிறகு தங்கமீன்கள், காக்காமுட்டை போன்ற படங்கள் வந்தன. எனவேதான் இந்தப்படத்தைத் தயாரித்தோம்.

பணியாற்றிய அவ்வளவு பேரும் ஒரு குடும்பம் போலப் பணியாற்றினார்கள். இந்தப்படத்துக்கு வருகிற சூர்யா ரசிகர்கள், 24, சிங்கம்3 ஆகியனவற்றைப் போல் எதிர்பார்க்காமல் வரவேண்டும். அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் வரும், அதனால் அவர்களும் கற்றுக்கொள்ள படத்தில் நிறைய விசயங்கள் இருக்கின்றன என்றார் சூர்யா.

பசங்க 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆல்பத்திற்கு க்ளிக்குக!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!