Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதர்வாவின் நன்றிக்கடன்?

2010 ஆம் ஆண்டு வெளியான பாணாகாத்தாடி படம் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு வந்தவர் அதர்வா. அதன்பின் “முப்பொழுதும் உன் கற்பனைகள்”,“பரதேசி”, “இரும்புக்குதிரை”, “சண்டிவீரன்”,“ஈட்டி” ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

அதர்வாவின் எல்லாப்படங்களுமே நன்கு பேசப்பட்டது. ஆனால் அந்த அளவு வியாபாரரீதியாக வெற்றி பெற்றது என்று சொல்லமுடியாது. அண்மையில் வெளியான ஈட்டி படம் வரவேற்போடு வசூலையும் ஈட்டிவருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கடுத்து “கணிதன்” மற்றும் “ருக்குமணி வண்டிவருது” ஆகிய படங்களில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவற்றிற்கும் அடுத்து பாலா இயக்கத்தில் ஐந்துநாயகர்களில் ஒருவராக நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இவர் ஒருபடத்தைத் தயாரிக்கவும் முடிவுசெய்திருக்கிறாராம். பாணாகாத்தாடி படத்தை இயக்கிய பத்ரிவெங்கடேஷ் சொன்ன கதை அதர்வாவுக்கு பிடித்திருக்கிறதாம். அவரை வைத்துப் படமெடுக்கத் தயாராக இருந்தவர்களிடம் அந்தக்கதை பற்றிச் சொன்னாலும் அதைப்படமாக எடுக்க யாரும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதனால் அதர்வாவே அந்தக்கதையைப் படமாக எடுக்கத் தயாராகிவிட்டாராம். அதற்கான தொடக்கக்கட்ட வேலைகள் தற்போது நடந்துகொண்டிருப்பதாகவும் விரைவில் அதுபற்றிய அறிவிப்புகள் வரக்கூடும் என்றும் சொல்கிறார்கள். அப்படி நடந்தால் தன்னை நாயகனாக்கிய இயக்குநருக்கு அதர்வா செய்த நன்றிக்கடனாவே அந்தப்படம் இருக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close