Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதயநிதியை இயக்குகிறார் சுசீந்திரன்?

மான்கராத்தே படஇயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி, எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கெத்து படம் பொங்கலன்று திரைக்கு வரவிருக்கிறது. அந்தப்படத்துக்கு அடுத்து அவர், என்றென்றும்புன்னகை படஇயக்குநர் அகமது இயக்கத்தில் ஒருபடம் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஜாலிஎல்எல்பி என்கிற படத்தின் தமிழாக்கமாக அந்தப்படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்போதே பாதிக்குமேல் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கெத்து படம் வெளியான பின்னர் அந்தப்படம் தொடர்பான செய்திகளை படக்குழுவினர் வெளியே சொல்வார்கள்.

அதேநேரம் இப்போது, அந்தப்படத்துக்கும் அடுத்து உதயநிதி நடிக்கவிருக்கும் படம் பற்றிய பேச்சகுள் நடந்துமுடிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. உதயநிதி நடிக்கும் அடுத்தபடத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அவர் சொன்ன கதை உதயநிதிக்குப் பிடித்திருக்கிறது. திரைக்கதையை இறுதிசெய்யும் வேலைகள் நடந்துகொண்ருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இன்னமும் சுசீந்திரன் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்படவில்லையெனினும், பேச்சுவார்த்தை நல்லபடியாகப் போய்க்கொண்டிருப்பதால், உதயநிதியின் அடுத்தபடத்தை அவர்தான் இயக்கப்போகிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close